அரசாங்கம் தாக்குதலுக்கு உத்தரவிடவில்லை- பிரதிப் பொலிஸ் மா அதிபர்
உயர் கல்வி டிப்ளோமா மாணவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாணவர்களினால் கடந்த 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இதன்போது, குறித்த தாக்குதல் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதன்று என பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இருந்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு மாணவர்களைக் கலைந்து செல்லச் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தானே ஆலோசனை வழங்கியதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.