ஊழல், மோசடியாளருக்கு என்னிடம் மன்னிப்பு கிடையாது! ஜனாதிபதி
ஊழல், மோசடியாளர்கள், சட்டவிரோத செயற்பாட்டார்கள் ஆகியோருக்கு தம்மிடம் எவ்வித மன்னிப்பும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் போன்ற தரப்பினரை தாம் சந்திக்கக்கூட தயார் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மொணராகலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
''நாட்டிற்குத் தேவையான அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தவே மக்கள் என்னை பதவியில் அமர்த்தினர். நாட்டு மக்களின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. அத்துடன், ஊழல், மோசடியற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் தோய்வு ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் நான் இடமளிக்கமாட்டேன்'' என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.