வெள்ளை வான் கடத்தலில் மேர்வின் சில்வா சாட்சியம்
கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக சாட்சியமளிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆஜராகவுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிளபிட்டியவை சந்தித்து இது தொடர்பான சாட்சியங்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த அரசாங்கத்தின் தோல்வியினை அடுத்து நாட்டில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களில் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்புபட்டிருப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.