Breaking News

உள்ளங்களில் மனிதநேயத்தினைக் கொண்டு ஒளியேற்றும்போதே தீபாவளி அர்த்தமிக்கதாக மாறும்

இலங்­கையர் என்ற வகையில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இன, மத பேதங்­களை மறந்து சமா­தா­ன­மா­கவும், மகிழ்ச்­சி­யு­டனும் வாழ்­வ­தற்கு மனதில் உறுதிபூணு­வ­துடன் எமது உள்­ளங்­களை மனித நேயத்­தி­னைக்­கொண்டு ஒளியேற்­றுவோம். 

அப்­போ­து தான் தீபா­வளிப் பண்­டிகை அர்த்­தம்மிக்­க­தாக அமையுமென்று ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்து ள்ளதாவது,

தீமை தோற்­க­டிக்­கப்­பட்டு நன்மை வெற்றிபெறு­வ­தனை அடை­ யா­ளப்­ப­டுத்தி உல­கவாழ் இந்து பக்­தர்கள் தீபங்­களை ஏற்றி இன்று தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டா­டு­கின்­றனர்.

இந்­துக்­க­ளுக்கு தீங்­கி­ழைத்த நர­கா­சுரன் எனும் கொடிய அரக்­கனைத் தோற்­க­டித்த தினத்­தையும் இள­வ­ரசன் இராமன் வன­வா­சத்­தி­லி­ருந்து மீண்டு சீதை­யுடன் மீண்டும் அயோத்­திக்கு வருகை தந்த தினத்­தையும் விசே­ட­மாக தீபா­வளித் தினம் நினை­வு­ப­டுத்­து­கின்­றது. இந்த அனைத்து தெய்­வீகக் கதைகள், பழக்­க­வ­ழக்­கங்­க­ளி­லி­ருந்தும் மனி­தர்­க­ளிடம் காணப்­படும் தீய எண்­ணங்­களை விட்­டொ­ழித்து நன்­மை­யெனும் ஒளியை ஏற்றவேண்டும் என்­ப­தையே எமக்கு வலி­யு­றுத்­து­கின்­றது.

கடவுள் மீது கொண்ட தீராத பக்­தி­யுடன் தீபா­வளி தினத்தில் மேற்­கொள்­ளப்­படும் சமயக் கிரி­யைகள் ஊடாக தன்னுள் குடி­கொண்­டி­ருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து நற்­ப­யனை அடைந்­து­கொள்ள முடி­யு­மென்­பது இந்து மத நம்­பிக்­கை­யாகும். அதற்­க­மைய இது இந்­துக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி அனைத்து மக்­க­ளுக்கும் முன்­மா­தி­ரியை எடுத்­தி­யம்பும் சமயப் பண்­டிகை என்­பதில் விவா­தத்­திற்கு இட­மில்லை.

இலங்­கையர் என்ற வகையில் நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இன, மத பேதங்­களை மறந்து சமா­தா­ன­மா­கவும், மகிழ்ச்­சி­யு­டனும் வாழ்­வ­தற்கு மனதில் உறுதிபூணு­வ­துடன் எமது உள்­ளங்­களை மனித நேயத்­தி­னைக்­கொண்டு ஒளியேற்­றுவோம். அப்­போ­துதான் தீபா­வளிப் பண்­டிகை அர்த்­தம்­மிக்­க­தாக அமையும்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனை வருக்கும் எனது இதயங்கனிந்த நல்லாசிகள்....!