Breaking News

யுத்தக் குற்றச் செயல்களுக்கு புது நீதிமன்றம்-சட்டமூலம் தயார்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள புதிய நீதிமன்றமொன்று நிறுவப்படுவதற்கான சட்டதிட்டங்கள் அடங்கிய சட்ட மூலம் தயாரிக்கப்படுவதாக அரசியல் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.


இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.  யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைக்கு அமைக்கப்படும் உள்ளக பொறிமுறைக்கு மேலதிகமாக இந்த நீதிமன்றம் அமையவுள்ளது.

உள்ளக விசாரணை தொடர்பில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு தொடர்பில் சட்ட திட்டங்களை ஆராய்வதற்கு அடுத்த மாதம் அரசாங்க தூதுக் குழுவொன்று தென் ஆபிரிக்கா செல்லவுள்ளதாகவும் அரசியல் மேல் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.