சுமந்திரன் கூறியது தவறு – சம்பந்தன்
கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றபொழுது முதலமைச்சர் கூறிய சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை.
அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கின்றோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார்.