ஹில்டன் பணிப்பாளர் சபைக்கு இராஜினாமாச் செய்யுமாறு பிரதமர் அறிவிப்பு
ஹில்டன் ஹோட்டலின் பணிப்பாளர் சபைக்கு உடன் இராஜினாமா செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
குறித்த பணிப்பாளர் சபையை அலரி மாளிகைக்கு அழைத்துள்ள பிரதமர், எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல் உடன் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு கூறியுள்ளார்.
தற்போதைய பணிப்பாளர் சபை இராஜினாமாச் செய்ததன் பின்னர், கிரிஷாந்த குரே தலைமையில் புதிய பணிப்பாளர் சபையொன்றை நியமிக்க பிரதமர் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.