இலங்கை கடல் வளம் பாதிப்புக்கு இந்தியாவிடம் நஷ்டஈடு - மஹிந்த அமரவீர
இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்தி இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடிப்பதனால் கடலுக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் சேதங்களுக்கு இந்திய அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கேற்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடல் வள மற்றும் நீர் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்துவதனால், கடல் பாசி, கடல் கீழ் உள்ள திரவியங்கள், சிறு மீன்கள் என்பன அழிவுக்குட்படுகின்றன. இதனை மீள் புனரமைப்புக்கு பாரியளவு செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த செலவை இந்தியாவிடம் கோரவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்பிறகு இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து கடற் படையினரால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பன எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.