Breaking News

6 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள்

நுகர்வோர் விவகார அதிகாரசபை 6 அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ளது.

இதன்படி. மைசூர் பருப்பு ஒரு கிலோ 190 ரூபாவாகவும், கிழங்கு ஒரு கிலோ 145 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 155 ரூபாவாகவும் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தோல் அகற்றப்பட்ட கோழியிறைச்சி ஒரு கிலோ 480 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட கோதுமை மா ஒரு கிலோ 95 ரூபாவாகவும், செத்தல் மிளகாய் ஒரு கிலோ 355 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


இந்த அதிக பட்ச கட்டுப்பாட்டு விலை நாளை தொடக்கம் அமுலுக்கு கொண்டுவரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே , எதிர்வரும் 26 ம் திகதி தொடக்கம் அப்பம் , தேநீர் , பால் தேநீர் உற்பட மேலும் சில உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அப்பம் , தேநீர் , பால் தேநீர் ஆகியவற்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.