வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையை நிறுவ ஏற்பாடு
வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாணம் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமதிஸ்ஸ தேரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
உத்தேச புத்தர் சிலை நாகதீப விகாரையை அண்மித்த கடற்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.சுமார் 110 அடி உயரத்தில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் வடிவம் இங்கு சிலையாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
புத்தர் சிலையின் மேற்புறமாக நாகதீப விகாரை பற்றிய புராணக்கதைகளை விளக்கும் சித்திரக்கூடம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
உத்தேச சிலை நிர்மாணத்துக்கு பல கோடி ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனிப்பட்ட நிதி அன்பளிப்புகளின் ஊடாக இதனை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு இதுபோன்ற சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.