Breaking News

எந்த அடிப்­ப­டையில் புலி அமைப்­பு­களின் தடைகள் நீக்­கப்­பட்­டன - விமல் கேள்வி

புலம்­பெயர் தமிழ் அமைப்­பு­களின் தடை­களை நீக்கி, தடுப்பில் உள்ள புலிப் பயங்­க­ர­வா­தி­களை விடு­தலை செய்­வதும் இந்த நாட்டை பயங்­க­ர­வா­தத்தில் இருந்து காப்­பாற்­றிய இரா­ணு­வத்தை கைது­செய்­வ­துமே இந்த நாட்டின் நல்­லாட்சி. எந்த அடிப்­ப­டையில் புலி அமைப்­பு­களின் தடைகள் நீக்­கப்­பட்­டன என அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

எமது பாது­காப்பு முகாம்­களில் சர்­வ­தேச அமைப்­புகள் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள யார் அதி­காரம் வழங்­கி­யது எனவும் அவர் கேள்வி எழுப்­பினார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் காணா­மல்­போனோர் தொடர்பில் ஆராயும் குழு­வினர் குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருடன் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாம் வளா­கத்­தினுள் சென்­றுள்­ளனர். அங்கு சென்று முகாம் பிர­தே­சத்­தினுள் உள்ள பழைய கட்­டி­டங்­களை பரி­சோ­தித்­துள்­ளனர். 

அதேபோல் பொது­மக்கள் மீது வன்­கொ­டு­மைகள் மற்றும் தாக்­குதல் நடந்­துள்­ள­தாக சந்­தே­கப்­ப­டு­வ­தா­கவும் அது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர். அதேபோல் அப்­போ­தைய கால­கட்­டத்தில் கடற்­படை முகாமில் செயற்­பட்ட ஒரு இரண்டு கடற்­படை அதி­கா­ரி­க­ளையும் குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் கைது­செய்­துள்­ளனர். இவை அனைத்தும் கடந்த ஒரு­வார காலத்­தினுள் நடந்­துள்­ளது.

இதில் பிரச்­சினை என்­ன­வென்றால் எமது நாட்டின் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய பாது­காப்பு முகாம்­களை பரி­சோ­திக்க சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு எப்­போது அனு­மதி கிடைத்­தது. இது­வரை காலமும் எமது பாது­காப்பு முமாம்­களில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள சர­வ­தேச தரப்­பி­ன­ருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­தில்லை. அதேபோல் எந்­த­வொரு நாட்­டிலும் அவர்­க­ளது பாது­காப்பு முகாம்­களில் ஏனைய நாட்­ட­வரை விசா­ர­ணைக்­காக அனு­ம­திக்க மாட்­டார்கள். எனினும் இந்த அர­சாங்கம் ஜெனிவா மாநாட்டில் ஏற்றுக் கொண்­டுள்ள உடன்­ப­டிக்­கைக்கு அமைய, அதேபோல் கலப்பு நீதி­மன்ற முறை­மையை உரு­வாக்க முன்­னரே சர்­வ­தேச தரப்பின் விசா­ர­ணை­களை ஆரம்­பித்து விட்­டனர். அது­மட்­டு­மின்றி விசா­ரணைக் குழுவின் உட்­பி­ர­வே­சத்தின் பின்னர் கடற்­ப­டையின் சிலரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இது மிகவும் பயங்­க­ர­மான ஒரு செயற்­பா­டாகும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் இன்னும் வேடிக்கை பார்க்கப் போகின்­ற­னரா? நாட்டை காப்­பாற்ற நாட்­டுக்­காக போரா­டிய வீரர்­களை இவ்­வாறு தண்­டிக அனு­ம­திக்க முடி­யுமா? அவ்­வாறு தண்­டிக்­கப்­ப­டு­வதை வேடிக்கை பார்ப்­ப­தாயின் இந்த நாட்டில் நாட்டை நேசிக்கும் மக்கள் உள்­ள­னரா என்ற பல கேள்­வி­களை நாம் கேட்­கின்றோம். உலகில் வேறு எந்த நாடும் தமது இரா­ணு­வத்தை இவ்­வாறு காட்­டிக்­கொ­டுக்­காத்து. மேலும் இலங்­கையில் எவ்­வாறு அத்­து­மீ­றிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஐ.நா உறுப்­ப­னர்­க­ளுக்கு யார் இவ்­வாறு அதி­கா­ரத்தை கொடுத்­தது. இந்த விவ­கா­ரத்தில் நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளதா, குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு யார் அந்த அதி­கா­ரத்தை கொடுத்­தது என பல கேள்­வி­களும் எழு­கின்­றனர். 

உள்­நாட்டு விசா­ரணைக் குழு­வி­ன­ருக்கு இலங்­கையில் ஏதேனும் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள அனு­ம­திக்க முடியும் ஆனால் சர்­வ­தேச குழுக்­க­ளுக்கு யார் இவ்­வாறு அனு­மதி வழங்­கி­யது. எமது நீதி­மன்ற அனு­மதி இல்­லாது எமது இரா­ணுவ முகா­முக்குள் புகுந்து விசா­ர­ணை­களை மேற்­கொள்ள ஐக்­கிய நாடுகள் குழு­வுக்கு உள்ள அதி­காரம் என்ன. புலிகள் செய்த குற்­றத்தை கண்­ட­றி­யாது எமது இரா­ணுவம் என்ன செய்­துள்­ளது என்­பதை ஆராயும் நட­வ­டிக்­கை­களே இன்று ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. 

இன்­று­வ­ரையில் மனித உரிமை மீறல் குற்­றத்தின் கீழ் இரா­ணு­வத்தின் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். விடு­தலை புலி­களின் ஆத­ரவில் செயற்­பட்ட, அவர்­களின் கைக் கூலி­க­ளாக செயற்­பட்ட நபர்­களின் கொலை தொடர்பில் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்­ளது. இந்த நாட்டை காப்­பாற்­றிய எமது இரா­ணுவ வீரர்­களை இந்த அர­சாங்கம் கவ­னிக்கும் விதம் எவ்­வாறு என்­பதை மக்கள் விளங்­கிக்­கொள்ள வேண்டும்.

நாட்டின் பாது­காப்பை பலப்­ப­டுத்­துவோம், எமது இரா­ணு­வத்தின் நலனில் கவனம் செலுத்­துவோம் என ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தெரி­வித்து வரு­கின்றார். ஆனால் இர­க­சி­ய­மாக எமது இரா­ணு­வ­வீ­ரர்­களை தண்­டிக்கும் வேலை­யினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தேசிய பாது­காப்­பினை உறுதிப் படுத்­து­வ­தாக கூறிக்­கொண்டு இலங்­கையில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள புலம்­பெயர் புலி அமைப்­புகள் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்கும் வர்த்­த­மானி அறி­வித்­தலை பாது­காப்பு செய­லாளர் விடுத்­துள்ளார்.

 தமி­ழீ­ழத்தை உரு­வாக்க கடு­மை­யாக போராடும் இந்த அமைப்­பு­களின் தடையை நீக்­கி­யுள்­ளனர். இலங்­கையில் யுத்தம் முடி­விற்கு வந்­த­பின்னர் இலங்­கையின் பாது­காப்பு பல­ம­டைந்த பின்னர் சர்­வ­தேச மட்­டத்தில் இருந்து ஈழத்தை உரு­வாக்கும் பிர­பா­க­ரனின் கொள்­கையை முன்­னெ­டுத்து சென்ற அமைப்­புகள் இவை­கள்தான். ஆகவே இந்த தமிழ் அமைப்­பு­களின் அச்­சு­றுத்­தலை அறிந்தும் அர­சாங்கம் இந்த தடையை நீக்­கி­யுள்­ளது. ஏன் அவ்­வா­றான தடை நீக்­கத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டது என்­பதை இன்னும் தெளி­வு­ப­டுத்­த­வில்லை. 

இவர்கள் தமி­ழீழ கொள்­கையை கைவிட்­டுள்­ளனர் என்று புல­னாய்வு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளதா? இவர்கள் மீண்டும் இலங்­கையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை சீர்­கு­லைக்க மாட்­டார்கள் என்று புல­னாய்வு தகவல் கிடைத்­துள்­ளதா? அல்­லது நாட்டை பிரிக்கும் செயற்­பா­டு­களை கைவிட்­டுள்­ளனர் என்று தகவல் கிடைத்­துள்­ளதா. அவ்­வாறு எந்­த­வித தக­வல்­களும் இல்­லாது எவ்­வாறு இந்த அமைப்­பு­களின் தடையை நீக்க முடியும். ஆகவே இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் பூரண விளக்­கத்தை முன்­வைக்க வேண்டும்

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கும் அரசாங்கம் எமது இராணுவ வீரர்களை கைதுசெய்து விசாரணை செய்கின்றனர். இது தான் எமது நாட்டின் இன்றைய நிலைமை. 

நாட்டை துண்டாடிய புலிகளுக்கு சுதந்திரம் கொடுத்து நாட்டை பாதகாத்த எமது இராணுவ வீரர்களை சிறைவாசம் அனுப்புகின்றனர். பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர் ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது இராணுவவீரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இன்று எமது நாட்டின் நல்லாட்சியின் நிலைமை இவ்வாறு மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.