Breaking News

குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு மஹிந்தவும், கோத்தாவுமே காரணம்: அசாத் சாலி

நாட்டில் தற்போது குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவுமே காரணம் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மஹிந்தவும், கோத்தபாயவும் பாரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். இதன்காரணமாகவே அவர்களின் ஆட்சியில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதுவே நாட்டில் தற்போது குற்றச்செயல்களில் அதிகரித்துள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.