தொடரும் மழையால் வவுனியாவில் மக்கள் அவதி
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பெய்யும் மழையினால் குளங்கள் வான் பாய்ந்து வருவதுடன் சமனங்குளம் பகுதியில் வீதியை ஊடறுத்து நீர் பாய்ந்து ஓடுவதால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன் வயல்களில் நீர் நிரம்பி காணப்படவதையும் அவதானிக்க முடிகின்றது.