Breaking News

கைதிகளின் விடுதலை இருதலைக் கொல்லி எறும்பைப் போலுள்ளது! - சுரேஷ்

இரு அரசியல் அதிகார மையம் கொண்ட இலங்கை அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் இருதலைக் கொல்லி எறும்பு போல் காணப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்றுடன் அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையிலேயே அது தொடர்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது நிச்சயமற்றது என தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் நாட்களில் கண்துடைப்பிற்காக சில பிணை அடிப்படையிலான விடுதலைக்கே வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது மன்னிப்பின் கீழ் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே கைதிகளின் பொதுவான கோரிக்கையாகவும் தமது நிலைப்பாடாகவும் உள்ளதெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.