அரசாங்கம் இராணுவத்தினரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றது : மஹிந்த
கடந்த அரசாங்கம் தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாகவும் எனினும் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடத்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாரிய நிதிமோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழு நேற்றைய தினம் இந்த விசாரணைகளை நடத்தவிருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு இணங்க விசாரணைகள் இன்று இடம்பெற்றன.