Breaking News

சீனாவுடன் உறவுகள் அவசியம் : லக்ஸ்மன் யாபா அபேவர்தன!

சீனாவுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேண அரசாங்கம் விரும்புவதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். சீனாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளைப் பேண வேண்டிய அவசியம் குறித்து அவர் நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பலம்பொருந்திய நாடுகள் பல சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டுள்ளன. சீனாவில் ஸ்திரமான பொருளாதார நிலைமை பிராந்திய வலய நாடுகளுக்கு அவசியமானது. சீனாவுடனான உறவுகளை அரசாங்கம் விருத்தி செய்து கொள்ள விரும்புகிறது. 

சீனாவுடன் நீண்ட காலம் இடைவெளியைப் பேணி வந்த பிரித்தானியா கூட தற்போது நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களில் சீனா பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.