மாணவர் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிக்கும் அரசாங்கம் பதிலளித்தேயாக வேண்டும் - கம்மன்பில
தற்போதைய அரசாங்கம் பொலிஸ் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவியதன் பலனை தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அனுபவிக்கின்றனர். அதனால் வோர்ட் பிளேஸ் இல் மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பு கோட்டேயில் அமைந்துள்ள தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த அரசாங்கத்தின் போதும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் பொலிஸார் அவர்களை நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளல் அல்லது கண்ணீர் புகை மூலம் அவர்களை கலைத்திருக்கின்றனர். ஆனால் மாணவர்களை மிலேச்சத்தனமாக தாக்கவில்லை.
தற்போது அதற்கு மாறாக மாணவர்கள் மிலேச்சத்தனமாக தாக்கப்படுகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காது வீதியில் சென்றுகொண்டிருந்த மாணவி ஒருவரும் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறைந்த பட்ச பலப்பிரயோகம் என்ற பேரில் பொலிஸார் தாக்குவதையும் முறையற்ற விதத்தில் கண்ணீர்ப் புகைக் குண்டு களை பிரயோகிப்பதையும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிந் தது.
ஆனால் அண்மையில் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத் தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான ருவன் குணசேகர, ஒரு நபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் போது அவரின் உட லில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் தாக்குதல் நடத்த முடியும் என்ற வரையறைகள் விடுக்கப்படவில்லை.
பொலிஸார் குறைந்த பட்ச பலப்பிரயோகத்தினை பயன்படுத்தி மாணவர்களை தாக்கினர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆர்ப்பாட்டத்தை கலைத்த பொலிஸார் மாணவிகளின் தலையில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியிருந்த படங்கள் வெளி யாகியிருந்தன.
இது அரசாங்கம் அமைத்த சுயாதீன ஆணைக்குழுவின் பலன். அதனை பல்கலைக்கழக மாணவர்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது. கடந்த காலங்களில் அர சியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வடக்கில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மறுபுறம் மீரியபெத்தை தோட்ட தொழிலாளர்கள் தமக்கு வீடு வழங்க வேண்டும் எனக் கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் செய்த போதும் பொலிஸார் அமைதியான முறையில் அந்த ஆர்ப்பாட்டங்களை கலைத்தனர்.
ஆனால் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி பயிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது அவர்களை மாணவர்கள் மிலேச்சத் தனமாக தாக்கியது நியாயமற்றது.
இவை அனைத்தும் பொலிஸ் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டதன் விளைவு கள். இதனால் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என்று எதிர்வு கூறினோம்.
நல்லாட்சி என்ற பேரில் நாட்டில் எம னின் ஆட்சியே இடம் பெறுகின்றது. தற் போதும் அரசு தனது சிறு உருவத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. அதனால் எதிர்காலத்தில் அரசின் சுயரூபம் விரை யில் வெளிப்படும். அதன்போது இந்த அரசுக்கு வாக்களித்த 52 சதவீதத்தினரும் உணர்ந்துகொள்வர்.
இங்கு மாணவர்களை தாக்கிவிட்டு தம்மை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு நாம் ஒன்றை மட்டுமே கூற விரும்புகின் றோம். அவர் தமது பேச்சாளர் பத வியிலி ருந்து சற்று காலம் விலகிச் சென்று சட் டம் பயின்ற பின்னர் மீண்டும் ஊடகப் பேச்சாளர் தொழிலில் இணைந்து கொள் வது சிறந்தது என்றார்.