அரசு எமக்களித்த வாக்குறுதிகளின்படி விசுவாசமாகச் செயற்பட வேண்டும் -சம்பந்தன் கோரிக்கை
பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறலாம். எமது எதிர்பார்ப்பும், தீர்க்கமான முடிவும் ஐ.நா. தீர்மானத்தை முற்றுமுழுதாக நிறைவேற்ற வேண்டும் என்பதேயாகும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசுவாசமாகச் செயற்படும் என்று நாம் நம்புகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சரவை இணைப்பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க கடந்த வியாழனன்று கருத்து வெளியிடுகையில்,
"ஐ.நா. அறிக்கையின் ஆரம்பத்தில் ஹைபிரிட் விசாரணை எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதியும், பிரதமரும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஹைபிரிட் விசாரணை பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. ஐ.நா. நிர்ணயிக்கும் நீதிபதிகளுடனான விசாரணைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். தற்பொழுது இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய எமது சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே இடம்பெறவுள்ளதென" தெரிவித்திருந்தார். இது தொடர்பில்
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் குறித்த பத்திரிகை கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட தீர்மானம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறலாம். அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் தீர்மானத்தை முறையாகவும், முழுமையாகவும் நிறைவேற்ற விசுவாசமாகச் செயற்பட வேண்டியது இன்றியமையாதது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணையை இலங்கை ஏகமனதாக ஏற்றுள்ளது. அத்துடன் இதனை முன்மொழிந்த சம்பந்தப்பட்ட நாடாகவும் இலங்கை விளங்குகின்றது. அந்தவகையில் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்தை சார்ந்ததாகும். இது தொடர்பிலும் தடுப்பு காவலிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் விரைவில் சந்தித்து பேச்சுக்களை நடத்துவோம்.
அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதிகளை கருத்திற்கொண்டு செயற்படுமென நாம் முழுமையாக நம்புகின்றோம் லிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் விரைவில் சந்தித்து பேச்சுக்களை நடத்துவோம். அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதிகளை கருத்திற்கொண்டு செயற்படுமென நாம் முழுமையாக நம்புகின்றோம் .
முழுமையாக நம்புகின்றோம் லிலுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் விரைவில் சந்தித்து பேச்சுக்களை நடத்துவோம். அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதிகளை கருத்திற்கொண்டு செயற்படுமென நாம் முழுமையாக நம்புகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.