அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதம்
அரசியல் கைதிகளின் விதலையை வலியுறுத்தி வவுனியாவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா, சிதம்பரபுரம் பிரதேசத்தில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த கிராம மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சிதம்பரபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திற்க முன்பாக அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சிறுவர்கள் பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி உண்ணாவிரத்தை மேற்கொண்டதுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள, கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் கொடு, நல்லாட்சி அரசே கைதிகளை விடுதலை செய், அரசியல் கைதிகளை வாழ விடு நல்லாட்சி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.