Breaking News

அவன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்திற்கு தடை – ராஜித

அவன்ட் காட் மெரின்டைம் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சகல ஒப்பந்தங்களையும் இரத்துச்செய்து, சகல ஆயுதங்களையும் இரத்துச் செய்து அவற்றைக் கடற்படையினருக்கு ஒப்படைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், கடற்படைத் தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றனர்.

போலி கணக்கு வழக்கு தொடர்பில் தகவல் வெளியானால், அவை தொடர்பில் விசாரணை நடத்தி, உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ்மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.