Breaking News

காணாமற்போன 5,000 பேர் தொடர்பிலான அறிக்கை ஐ.நா பிரதிநிதிகள் குழுவிடம் கையளிப்பு

காணாமற்போன சுமார் ஐயாயிரம் பேரின் விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று “காணாமற்போனோர் அல்லது பலவந்தமாக காணாமற்போனார் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றும் காணாமற்போனோரின் பெற்றோர்கள் ஒன்றியம் அந்த அறிக்கையை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குறித்த குழுவிடம் கையளித்துள்ளது.

குறித்த அறிக்கையில் காணாமற்போனோர் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் அழைப்பாளர் ஆனந்த ஜயமான தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என அந்த குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான ஏரியல் டுலிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.