பொன்சேகா தவறிழைத்துள்ளதாக நீதிமன்றம் தெரிவிப்பு
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்தமையினால் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியிலிருந்து, மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டமை, சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, கட்சி எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினாலேயே, மாகாண சபை உறுப்பினர்களான அசோகா தயாரத்ன, பத்மசிறி டி சில்வா மற்றும் மல்ஹமி ரத்நாயக்க ஆகியோர் வெளியேற்றப்பட்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த மூவரும் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
இதனைத் தொடர்து அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் முறையற்ற விதத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.