கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை வேண்டும் : ஆனந்தன்
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.. அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“வடமாகாணத்தின் மையம் என்று சொல்லக் கூடிய வவுனியா மாவட்டத்திற்கு மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோதும், 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி என்று கேட்ட போதும், ஜனநாயக ரீதியாக நடந்த தேர்தல் காலங்களிலும், உரிமைக்கான போராட்ட காலங்களிலும் வவுனியா வர்த்தக சங்கம் செய்த உதவிகளை மறந்துவிட முடியாது.
ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானம் மற்றும் அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இந்த ஆண்டிலே ஜனாதிபதி தேர்தல், பாராளு மன்றத் தேர்தல் என இரு தேர்தல் கள் நடைபெற்றுள்ளன.
இந்த தேர்தல் இந்த நாட்டிலே ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த ஆட்சிமாற்றம் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்காக நாம் இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு எமக்கு வேண்டும். நீங்கள் எமக்கு வழங்கியிருக்கும் பணி மிகவும் கடினமான கஷ்டமான பணி. எமது மக்களின் விடிவுக்காக நாம் இன்னும் பல தடைகளை தாண்டி செல்லவேண்டியுள்ளது.
குறிப்பாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல் கைதிகளின் பிரச்சினை இருக்கின்றது. அதேநேரம் ஜனாதிபதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியிருக்கின் றார். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா இல்லையா என்பது எதிர்வரும் 7 ஆம் திகதி தான் தெரியும். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஒரு பாரதூரமான, இந்த நாட்டின் அரசியலை பாதிக்கின்ற விளைவு ஏற்படும் என நினை க்கின்றேன்.
அதுமட்டும ல்ல, தமிழ் தேசி யக் கூட்டமைப்பு கூட இந்த அரசி யல் கைதிகள் விடயத்தில் இந்த அரசாங்கம் காத்தி ரமான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் அரசுடனான பேச்சுக்கள், உறவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏனென்றால் கடந்த 10 வருடகாலமாக இந்த நாட்டிலே மாற்ற முடியாது என்று இருந்த ஒரு இருண்ட யுகத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் தான் மாற்றியமைத்தவர்கள்.
இந்த ஜனாதிபதியும், பிரதமரும் தெற்கில் இருக்கின்ற இனவாதிகளுக்கும், சலசலப்புகளுக்கும் பயந்து அரசியல் கைதிகள் விடயத்தில் செயற்படாவிட்டால் அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதே சரீதியிலும் அரசுக்கு அழுத்தங்கள் ஏற்படும். எனவே, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரத மருக்கும் இருக்கிறது. இதன் மூலமே வடக்கும், தெற்கும் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடி யும் எனவும் தெரிவித்தார்.