உயர் கல்வி அமைச்சர் கூறுவது பொய்- பல்கலை மாணவர் ஒன்றியம்
உயர் டிப்ளோமா மாணவர்களின் கற்கைநெறிப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விடுக்கும் அறிக்கை வெறுமனே பொய்யாகும் என அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த டிப்ளோமா கற்கை நெறியை பட்டப்படிப்புக்கு சமனான ஒன்றாக மாற்றுவதற்குத் தேவையான எந்தவொரு சுற்றுநிருபமும் இதுவரை வெளியிடப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் அறிக்கை விடுப்பதை விட்டு விட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் கவனத்தை செலுத்துமாறு அவ்வமைப்பு அமைச்சரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பு, மருதானையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.