Breaking News

நல்லாட்சி அரசின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் – மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கிய அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை வர்த்தமானி மூலம் நீக்கியமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தற்பொழுது மக்களுக்கு மறந்துபோயுள்ளமை கவலையளிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். ஹக்மனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.