தாயகம் தவிர்ந்த இடங்களில் தலைவர் பிரபாவின் பிறந்த தினம் கொண்டாடப்படுகின்றது
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 61ஆவது பிறந்த தினம் இன்று தமிழகம், மற்றும் புலம்பெயர் நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
1954ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி பிறந்த வே.பிரபாகரன், வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் கல்வி கற்றார்.தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் மேற்படிப்புக்கச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வித் தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. இதனால் பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கினார்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்காக கொள்கை மாறாதவராக,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தலைமை வகித்து வழிநடத்தி வந்தார்.
2008 ஆம் ஆண்டு வரை அவரின் பிறந்த தினம் தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு எங்கும் கொண்டாடப்பட்டது.எனினும் பின்னர் ஏற்பட்ட இலங்கை அரசின் கடும் கெடுபிடிகளால் அங்காங்கே கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வழமை பொன்று இந்த முறையும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
கனடா, பிரான்ஸ், நோர்வே, லண்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.