நாளை முதல் மருத்துவத்தை பகிஷ்கரிக்க அரசியல் கைதிகள் தீர்மானம்!
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நாளை(சனிக்கிழமை) முதல் மருத்துவத்தினை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையிலேயே இவர்கள் அனைவரும் நாளை முதல் மருத்துவத்தினை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினதல் வழங்கப்பட்ட உறுதிமொழி பொய்யாகியுள்ள நிலையில் தமது இறுதி போராட்டமாக நாளை முதல் மிக மோசமான நிலையில் உடல்நிலை காணபட்டாலும் மருத்துவம் பெறுவதில்லை என தீர்மானித்துள்ளதுடன் மருத்துவத்தை முற்றுமுழுவதுமாக பகிஸ்கரிக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.