மாவீரர்களை நினைவுகூறும் சுவரொட்டிகளால் குழப்பம்
தமிழர் விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் மாதமான கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் மாவீரர் மாதத்தில் ஜே.வி.பி யின் கிளர்ச்சியின் போது உயிரிழந்த அவர்களது உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு தமிழர்களின் ஆதரவைக் கோரியே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகளை ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி அமைத்துள்ள குமார் குணரத்னம் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சி ஒட்டியுள்ளது. 26 ஆவது கார்த்திகை வீரர் நினைவு என்று பொறிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், “இது வீரர்களின் மாதமாகும்" என்ற வாசகத்துடன் விலங்கை உடைத்தெறியும் கைகள் போன்ற படமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.