தீவிரவாத தாக்குதலின் எதிரொலி: ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்
பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். 352 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடைபெறும் ஐரோப்பிய கால்பந்து போட்டிபிரான்ஸில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாரிஸ் நகரின் முக்கியமான கால்பந்து மைதானத்திற்கு வெளியேயும் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தினர். இத னால் ஐரோப்பிய கால் பந்து போட்டி பிரான்ஸிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் போட்டி அமைப்பாளர்கள் திட்டமிட்டபடி ஐரோப்பிய கால்பந்து பிரான்ஸில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். போட்டி அமைப்புக்குழு தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறும்போது, பலத்த பாதுகாப்புடன் ஐரோப்பிய கால்பந்து போட்டிநடைபெறும். போட்டியை இரத்து செய்தால் தீவிரவாதிக ளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என்றார்.