வட மாகாண சபையின் 38ஆவது அமர்வு ஆரம்பம்
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த அமர்வில், வடமாகான சபையின் அமைச்சர்கள், மற்றும் வடமாகான சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளையும், பிரேரணைகளையும் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்கள் எத்தனை வாகனங்களுக்கு உரித்துடையவர்கள், வலயக்கல்வித் திணைக்களங்களில் பணிபுரிகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலர்களின் நியமனம், முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று சட்டவிரோத காடழிப்பு மற்றும் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை நூற்றாண்டு விழா ஆகிய விடயங்கள் தொடர்பில், கேள்விகள் எழுப்பப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும், தற்போது கலந்துரையாடல் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும் நிலையில், இறுதி முடிவுகள் எவ்வாறு எட்டப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் சில மணி நேரங்களில் தெளிவாக தெரியவரும் எனவும் வடமாகான சபைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.