மகிந்தவிற்கு பட்ஜட் உப்பு சப்பற்று இருக்கிறதாம்!
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வரவு செலவுத்திட்ட யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் புரியவில்லை என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத்திட்டம் வாசித்துக் கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அவையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.
புரியாத வரவு செலவுத் திட்டமொன்றை செவிமடுப்பதில் பயனில்லை என மஹிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.