வட மாகாண சபையின் 37ஆவது அமர்வு ஆரம்பம்
அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த அமர்வில், வடமாகான சபையின் அமைச்சர்கள், மற்றும் வடமாகான சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளையும், பிரேரணைகளையும் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கடந்த காலங்களில் வடமாகான சபையினால் முன் வைக்கப்பட்ட கல்வி நியதிச் சட்டம், சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் மற்றும் முன்பள்ளிச் சட்டங்கள் தொடர்பில், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றனவா? இல்லையேல், அவை எப்போதாவது நடைமுரைப்படுத்தப்படனவா என்பதோடு, வடமாகான சபையின் உறுப்பினர்களுக்குரிய அடிப்படைச் சம்பளம் , வீட்டு வாடகை, தொலைபேசிக் கட்டணங்கள் உள்ளிட்ட இதர செலவீனங்களை சரியான வகையில் தமக்கு வழங்க முடியுமா என்பன தொடர்பில், கேள்விகள் எழுப்பப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும், தற்போது கலந்துரையாடல் மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும் நிலையில், இறுதி முடிவுகள் எவ்வாறு எட்டப்படுகின்றன என்பது தொடர்பில் இன்னும் சில மணி நேரங்களில் தெளிவாக தெரிய வரும் எனவும் வடமாகான சபைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.