Breaking News

பசிலின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்


இலங்கையின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச தலைமை தாங்கிய புஷ்பா ராஜபக்ச பவுண்டேசன் நிறுவனத்துக்கு, 3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றையடுத்தே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.அரச மோர்டகே முதலீட்டு வங்கியில் இருந்து, புஷ்பா ராஜபக்ச பவுண்டேசனுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாமல் 3.5 மில்லியன் ரூபா மாற்றப்பட்டுள்ளது தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்த பணப்பரிமாற்றலுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அரச நிறுவனம் ஒன்றில் இருந்து நிதயைக் கைமாற்றும் போது, அதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட வேண்டும். அந்த விதிமுறை மீறப்பட்டது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது அவரது மனைவி இந்த பவுண்டேசனை நடத்தி வந்தார். மகிந்த ராஜபக்சவின் தோல்வியை அடுத்து, புஷ்பா ராஜபக்ச அமெரிக்கா சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.