சோபித தேரரின் மரணம் குறித்த கருத்து: பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு
மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பாக பேராசிரியர் காலோ பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாலபே நெவில் பிரணாந்து வைத்தியசாலை தலைவர் வைத்தியர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார்.
இதன்படி 500 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் வழக்கமாக நோய்க் கிருமிகளை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதற்காக விஷேட வைத்திய நிபுணர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று உள்ளதாகவும் நெவில் பிரணாந்து இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் உடலில் விஷக் கிருமிகள் இருந்ததாக வௌியாக தகவல்கள் முற்றிலும் பொய்யானது என அவர் கூறியுள்ளார். தேரருக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட வேளை வைத்தியர்கள் பரிந்துரைத்த சிகிச்சைகளை மட்டுமே வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.