Breaking News

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.


எமது செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து விரிவான அழுத்தம் கொடுக்கக் கூடிய சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பான வேலைத்திட்டம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சோமவங்ச அமரசிங்க, ஒரு இலக்குடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த நாடு இருக்கின்ற நிலைமையிலிருந்து மிக துரிதமாக மீட்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து செயற்படப் போவதாக அவர் முன்னர் கூறியிருந்தார்.ஆனால் முற்போக்கு சோசலிச கட்சிக்கு எவ்வாறான இடம் வழங்கப்படும் எனவும் மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்கவிடம் வினவப்பட்டது.

அந்த கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், கட்சி சார்;ந்தவர்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே, தேசிய சுதந்திர முன்னணி சார்ந்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாகவும், கடந்த 2005 ஆம் ஆண்டும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் சோமவங்ச அமரசிங்க கூறினார்.