Breaking News

முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் சி.வி. – சம்பந்தன் விரைவில் சந்திப்பு

தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் முகமாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை நடத்தவுள்ளார்.

இது தொடர்பில் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் வடமாகாண சபையின் விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்படவுள்ளன. இந்த சந்திப்பின்போது பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு, சுமந்திரன் விக்னேஸ்வரனை பற்றி அவுஸ்திரேலியாவில் கூறிய கருத்துக்கள் என்பன கூட்டமைப்புக்குள் குழப்பநிலையை ஏற்படுத்தியிருந்ததுடன், சில நாட்களுக்கு முன்னர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட 3 பக்க அறிக்கை த.தே.கூட்டமைப்புக்குள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றது.