Breaking News

மேலும் 31 கைதிகள் நாளை மறுதினம் பிணையில் விடுதலை

பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைச் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, சிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளில், 31 கைதிகள் பிணையில் விடுதலைச் செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இவர்கள் குறித்த பெயர் பட்டியல் எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் இந்தப் பெயர் பட்டியலை வழங்கிய பின்னர் அவர்களை நீதிமன்றத்தல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவம், சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் பிணையில் விடுதலைச் செய்யப்படவுள்ளோரின் பெயர் பட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்களுக்கும் விடுதலைக் குறித்து அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த முறை சில கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அது குறித்து அறிந்திருக்காத உறவினர்கள் நீதிமன்றிற்கு பிரசன்னமாகியிருக்காத நிலையில், பிணைக் கைச்சாத்து தொடர்பில் பல சர்சைகளும் விமர்சனங்களும் எழுந்திருந்தது.

இந்நிலையிலேயே விடுதலைக் குறித்து முன்னதாகவே உறவினர்களுக்கு அறியப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார மேலும் குறிப்பிட்டார்.