31 பேரை மட்டுமல்ல, அனைத்து தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்க : அஸாத் சாலி
சிறையில் வாடும் 31 தமிழ் அரசியல் கைதிகளை மட்டுமல்ல, ஏனைய 192 கைதிகளையும் நல்லாட்சி அரசாங்கம் விடுவிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை இன்றைய தினம் விடுவிப்பதாக அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அவர்களை விடுவிக்காததினால் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீதான நம்பிக்கை வீழ்ந்துவிடக்கூடிய அபாயமும் காணப்படுவதாக அவர் கூறினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அஸாத் சாலி இவ்வாறு தெரிவித்தார்.