குவார்ட்டர் விலையையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமென உண்ணாவிரதம்
தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்ற கோரிக்கை
வலு பெற்று வரும் வேளையில், மழை காரணமாக கூலி வேலைக்கு போக முடியாததால், குவார்ட்டர் விலையையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டுமென வித்தியாசமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மழை வெள்ள பாதிப்பால் டாஸ்மாக் மது குடிப்போர் கூலி வேலைக்கு போக முடியவில்லை. இதனால் குவார்ட்டருக்கே வழியில்லாமல் தவிக்கிறோம்.
இதனால் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் குவார்ட்டர் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி அம்பத்தூ
ரில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகிறது '' என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினரிடம் விசாரித்த போது, ''இந்த அறிக்கை உண்மைதான் என்றும் உண்ணாவிரதத்திற்காக போலீசாரிடம் அனுமதி வாங்க வேண்டியதுள்ளது'' என்றனர்.