நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் சிவாஜிலிங்கம் (படங்கள் இணைப்பு)
தாய விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் தினமான நவம்பர் 27ம் திகதியான இன்று மாவீரர்களுக்கு புலனாய்வாளர்கள் சூழ்ந்திருக்க யாழ். நல்லூர் ஆலயம், பெரிய தேவாலயம் ஆகியவற்றில் ஈகை சுடர் ஏற்றபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த அஞ்சலியை செலுத்தியுள்ளார். காலை 9 மணிக்கு நல்லூர் ஆலயத்தில் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் தொடர்ந்து யாழ்.பெரிய தேவாலயத்திலும் ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம், உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவுகூரும் உரித்தை யாரும் பறிக்க முடியாது.
எமக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை மனங்களில் கொண்டு அவர்களுக்காக நாங்கள் மனமுருகி ஈகை சுடர் ஏற்றி செய்கின்ற அஞ்சலியும் நாங்கள் அவர்களை மறக்கவில்லை அவர்களுடைய கனவுகள் ஒருநாள் நனவாகும் என்ற திடமுமே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியாகும்.
அதனை நாங்கள் எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தொடர்ந்து செய்வோம் தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என்றார்.