யாழ் பல்கலைக்கழகத்தினை சுற்றி புலனாய்வாளர்கள்!
மாவீரர் வாரத்தினை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான நிகழ்வுகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன.
இதன்காரணமாக யாழ் பல்கலைக்கழக வளாகத்தினைச் சுற்றி புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது
யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாகவுள்ள கட்டடத்தில் முகாமிட்டுள்ள புலனாய்வாளர்கள் தொலைநோக்கிகளின் உதவியுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகளை கண்காணித்து வருகின்றனர்.
இதன்காரணமாக அப்பகுதியில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சநிலைமை தோன்றியுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு இரத்தான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது
இந்த இரத்ததான நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.