Breaking News

மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு அனுமதியில்லை!

வடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு அனுமதியில்லை என பொலிஸ் பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்பைக் கொண்டாடுவது அல்லது அதற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை தனியாகவோ, குழுவாகவோ ஒழுங்கமைப்பதும், பங்கேற்பதும் சட்டவிரோதமாகும்.

மாவீரர் நாள் என்பது விடுதலைப் புலிகளால் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளில் ஒன்று. புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இத்தகைய நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.

வவுனியாவில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது குறித்து விசாரித்து அதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டாலும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய காவல்துறைக்கு அனுமதி இல்லை' எனவும் தெரிவித்தார்.