சுமந்திரன் கூட்டமைப்பு தரப்பா? அரசாங்கத் தரப்பா?? சந்தேகத்தை கிளப்பும் சந்திப்புக்கள்
இலங்கைக்கு அண்மையில் விஜயத்தை மேற்கொண்டிருந்த
ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இரண்டு தடவை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கொழும்பில் அவரைச் சந்தித்த போது கூட்டமைப்பின் ஒரு பிரதிநிதியாக சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
சமந்தா பவர் தனது விஜயத்தின் இறுதி நிகழ்வாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார். பிரதமர் ரணிலுடன் உயர் மட்ட அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, சுவாமிநாதன், ராவூப் ஹக்கீம் ஆகியோர் பங்குகொண்டனர். இதில் சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தமை பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
பிரதமர் ரணில் மற்றும் உயர் மட்ட அமைச்சர்களை பவர் சந்தித்த போது… சுமந்திரனும் காணப்படுகின்றார் |
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் சுமந்திரனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், புகைப்படங்களில் இதனைத் தெளிவாகக் காணமுடிகின்றது.
கைதிகள் விடுதலை, இராணுவக் குறைப்பு, போர்க் குற்ற விசாரணைக்கான பொறிமுறையை அமைத்தல் போன்றவை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் அரச தரப்பால் விளக்கப்பட்டது.
இதற்கு தமிழ்த் தரப்பை சாட்சியாக வைத்திருப்பதற்குத்தான் சுமந்திரன் அழைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.
கூட்டமைப்பினருடனான சந்திப்பில்…. சுமந்திரனும் காணப்படுகின்றார் |