நிதியமைச்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனை
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை சமர்ப்பிக்க போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் இன்று அந்த யோசனை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட முடியாவிட்டால், சபாநாயகரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மூன்று நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வரையில் இந்த யோசனைக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கையொப்பமிட்டிருக்கவில்லை. எனினும், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என மஹிந்த ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.