Breaking News

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ள அரசியல் தலைமைகள்

நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர் இதுவரையில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்டம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியதனை தொடர்ந்து,

இந்தக் குறித்த குழு வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்காக மேலும் சிலரை இணைந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரையில் முன்னணியில் மஹிந்த தரப்பினர்களில் 34 பேர், மக்கள் விடுதலை முன்னணியில் 6 பேர் மற்றும் கமியூனிஸ்ட் கட்சியில் ஒருவரும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளனர்.

எப்படியிருப்பினும் கடந்த காலங்களில் மஹிந்த தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்திய பலர் அந்த குழுவை கைவிட்டுள்ளமையினால் கிட்டத்தட்ட 30 பேர் மாத்திரமே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஆயத்தமாகவுள்ளனர்.

அரசியல் தகவல் வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலுக்கமைய அவர்களின் பெயர் விபரங்கள்

விமல் வீரவன்ச
உதய கம்மன்பில
தினேஷ் குணவர்தன
பந்துல குணவர்தன
காமினி லொக்குகே
பிரசன்ன ரணதுங்க
குமார வெல்கம
ரோஹித்த அபேகுணவர்தன
இந்திக்க அனுருந்த
சிசிர ஜயகொடி
மஹிந்தானந்த அலுத்கமகே
டலஸ் அலகபெரும
வீரகுமார திஸாநாயக்க
நிரோஷன் பிரேமரத்ன
வாசுதேவ நாணயக்கார
ஜயந்த சமரவீர
லொஹான் ரத்வத்தே
ரொஷான் ரணசிங்க
நாமல் ராஜபக்ச
பிரசன்ன ரணவீர
எஸ்.எம்.சந்தசேன
கெஹேலிய ரம்புக்வெல்ல
சீ.பீ.ரத்நாயக்க
ஜனக பண்டார தென்னகோன்
டீ.வீ.சானக
விஜித பேருகொட
உதயஷாந்த குணசேகர
சந்தசிறி கஜதீர
ரமேஷ் பத்திரன
மொஹான் சில்வா
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ
சாலிந்த திஸாநாயக்க
தாரானாத் பஸ்நாயக்க
காதர் மஸ்தான்
மனுஷ நாணயக்கார
மஹிந்த ராஜபக்ச
கீதா குமாரசிங்க