மாணவன் செந்தூரனின் இறப்பிற்கு நீதி கோரி கிளர்ந்தெழுந்தது யாழ். பல்கலைக்கழகம் (படங்கள்)
அரசியல் கைதிகளின் விடுதலை க்காக தமது உயிரையே தியாகம் செய்த கோப்பாய் மாணவனுக்காக, யாழ் பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று (வியாழக்கிழமை) அஞ்சலி செலத்தர்பட்டுள்ளது.
இதன்போது பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுதிரண்ட மாணவர்கள், ‘உண்ணாவிரதத்திற்கு பதில் சொல்லாத அரசே மாணவனின் உயிர் தியாகத்திற்கு பதில் சொல்வாயா?’, ‘நல்லாட்சி அரசே அசமந்தம் எதற்கு?’, ‘நல்லாட்சி என்பது கைதிகளை சிறையில் வைத்திருப்பது தானா?’ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிரை மாய்த்துக்கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான இராஜேஸ்வரன் செந்தூரன் (வயது – 18) என்ற உயர்தர வகுப்பு மாணவன் இன்று அதிகாலை ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சடலம் நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.