Breaking News

இன்று நண்பகல் முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

வாக்களித்த சம்பள அதிகரிப்பை வழங்காதிருக்கும் அரசாங்கத்தின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மதியம் 12.00 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில்வே ஊழியர்கள் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே முகாமையாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் ஒன்றாக இணைந்துகொள்ளவுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜனக பிரணாந்து அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்குமாறு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைளின் பிரதி பலனாக அவற்றை செய்துதருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. இருப்பினும், அவற்றை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் அசமந்தம் காட்டுகின்றனர். இதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுத்தும் அவை பலனலிக்காதுள்ளதாக பிரணாந்து கூறியுள்ளார்.