Breaking News

விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக இந்து ஆலயத்தின் மீது புகார்

கனடாவின் தலைநகரான ரொறன்டோவிலுள்ள பிரபல இந்து ஆலயமான கந்தசாமி ஆலயம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்தி வந்ததாகவும், பணம் வழங்கியமை குறித்து கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கந்தசாமி ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் பலவந்தமாக கட்டுப்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, குறித்த இயக்கம் கனடாவில் பயங்கரவாத பட்டிலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்பட்டார் என்ற அடிப்படையில் ஆலயத்தின் பூசகர் ஒருவருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எனினும், குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ஆலயத்தின் நீண்டகால தன்னார்வ தொண்டர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கனகசபாபதி என்பவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆலயம் தொடர்புபடவில்லையெனவும், சிலவேளைகளில் உலகத் தமிழர் இயக்க உறுப்பினர்கள் அங்கு வழிபாட்டிற்காக வந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.