மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி!
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும் நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி வழங்கப்படுவதோடு. புதிய தொழில்நுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு இரண்டு வருட வரி நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளில் ´சிலோன் டீ´ என்ற பெயர் பொறிக்கப்படுவது கட்டாயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!
நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.
இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக் கல் ஏல விற்பனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க திட்டம்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார். நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 3 மாதங்களில் 7500 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 3 மாத கால பாடநெறிக்கு 15000 ரூபா அறவிடப்படுவதுடன் அதில் 50 வீதம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் நிர்மாணிக்க திட்டம்
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குவதற்காக எதிர்வரும் 5 ஆண்டுகளில் 1 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
பாவனையற்ற அரச காணிகளில் புதிதாக வீடுகள் நிர்மாணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
நிர்மாணத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கு 2 மாதகால பயிற்சி வழங்குவதுடன், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 3 மாதங்களில் 7500 இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இளைஞர் யுவதிகள் பயிற்றுவிக்கப்படுவதற்காக 3 மாத கால பாடநெறிக்கு 15000 ரூபா அறவிடப்படுவதுடன் அதில் 50 வீதம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!
தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் தனியார் துறை ஊழியர்களின் வேலை நாட்கள் ஐந்தாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.