கண்டாவளை- பன்றிசுட்டான் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கண்டாவளையில் இருந்து பன்றிசுட்டான் வரையான வீதிப் புனரமைப்பு பணிகள் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன.
3.7 கிலோமீற்றர் நீளமான குறித்த வீதியில் 680 மீற்றர் வரையான பகுதி தார் வீதியாக்கப்படவுள்ளது. சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களம் நடைமுறைப்படுத்தும் இந்த வீதி புனரமைப்பு பணிகளை வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆரம்பித்துவைத்தார்.
குறித்த நிகழ்வில், கண்டாவளை மாதர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.வ.ஜெகானந்தன், கிராம அலுவலர் மற்றும் பாடசாலை பழையமாணவர் சங்கத்தின் செயலாளர், ஆகியோர் கலந்துகொண்டனர்.